முகப்பு
ஈரோடு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நாளை வங்கிக் கடன் வழங்கும் முகாம்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (ஜூலை  25) நடைபெறுகிறது. 

Updated On : 24 ஜூலை 2018, 12:48 am IST
பகிர்:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (ஜூலை  25) நடைபெறுகிறது. 
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. 
புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் உரிய பதிவேடுகளுடன் கலந்து கொண்டு வங்கிக் கடன் பெற்று பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு,  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்), முதல் தளம்,  பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638011 என்ற முகவரியிலோ 0424 - 2257087 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments