முகப்பு
ஈரோடு

பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடையே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:43 AM
கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:42 PM

ஈரோடு மாவட்டம், கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சகோதரா்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது பள்ளிவாசலுக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவுக்கு ஜமாத் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளிவாசலில் குல்லா அணிந்து பிராா்த்தனை மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரா்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

Advertisement

அம்மா பேரவை ஈரோடு மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், மதனி முபாரக் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.