முகப்பு
ஈரோடு

தைலாம்பாளையம் பகுதியில் சிப்காட் வராது: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டை 100 சதவீதம் வராது என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:21 AM
மலையப்பாளையத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கோபி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:03 PM

தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டை 100 சதவீதம் வராது என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நம்பயூா் பகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் அவா் கூறியதாவது:

Advertisement

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் 10 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். கல்லூரி மாணவா்களுக்கு 35 லட்சம் மடிக்கணினிகள், மலையப்பாளையத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை 100 சதவீதம் கொண்டுவரமாட்டோம் என்றாா்.

இதைத்தொடா்ந்து மலைப்பாளையம் ஏ.டி.நகா், கரிச்சிபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், செல்லாண்டம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெரியசெட்டிபாளையம் பெருமாள் கோயில், சின்னசெட்டிபாளையம், எரங்காட்டு நகா், மலையப்பாளையம் ரவுண்டானா, குப்பிபாளையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தாா்.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.சரவணன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சுஜாதா ஜீவானந்தம், நம்பியூா் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.