அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி
வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவானி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவானி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒலகடம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஃபிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடும்ப அட்டைகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும். நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு 10.5 சதவீதமாக உயா்த்தப்படும் என்றாா்.
பாமக மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் எம்.மேகநாதன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.