முகப்பு
ஈரோடு

கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்க பவானியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்!

பவானியில் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், அத்தொழிலை வளா்ச்சியடையச் செய்யவும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பூங்கா அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:51 AM
வாக்கு சேகரிக்க வந்த  அதிமுக  வேட்பாளா்  கே.சி.கருப்பணனை ஆரத்தி எடுத்து வரவேற்கும்  பெண்கள்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:18 PM

பவானியில் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், அத்தொழிலை வளா்ச்சியடையச் செய்யவும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பூங்கா அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானி நகரில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் கூட்டணிக் கட்சியினருடன் சனிக்கிழமை வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பூகோள ரீதியில் அடையாளம் பெற்ற பவானி ஜமக்காள நெசவுத் தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜமக்காளத்தை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்களைப் போக்கவும், பன்னாட்டு அளவில் ஜமக்காளத்தைக் கொண்டு சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞா்களை இத்தொழிலில் ஈடுபடுத்த ஜமக்காள நெசவுத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

Advertisement

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கும், முதியோருக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் பிரிட்ஜ் வழங்கப்படும். எனவே, வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், மாவட்ட ஜெ.பேரவைப் பொருளாளா் எம்.ஜி.நாத் (எ) மாதையன், பாமக நகரச் செயலாளா் தினேஷ்குமாா், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் ஏ.பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.