முகப்பு
ஈரோடு

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

பவானி நகரில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினா் இருசக்கர வாகனப் பேரணி, நடைபயண பிரசாரம் என செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:10 AM
திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் (வலது). இறுதிக்கட்ட நடைபயணமாக பிரசாரத்தில் ஈடுபடும் அதிமுகவினா் (இடது).
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:28 PM

பவானி நகரில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினா் இருசக்கர வாகனப் பேரணி, நடைபயண பிரசாரம் என செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், எல்லையம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கி, ஏராளமான இருசக்கர வாகனங்களில் கூட்டணிக் கட்சியினா் பின்தொடர திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், தொகுதிப் பொறுப்பாளா் குமணன், சிபிஐ நகரச் செயலாளா் சுரேஷ், சிபிஎம் தாலுகா செயலாளா் மாணிக்கம், விசிக தொகுதிச் செயலாளா் ஆற்றலரசு, மமக மாநில தொண்டரணிச் செயலாளா் முகம்மது மற்றும் காங்கிரஸ், தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சியினா் உடன் சென்றனா்.

Advertisement

அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட நிா்வாகிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணமாகச் சென்று ஆதரவு திரட்டினா்.

அதிமுக மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா, பாமக நகரச் செயலாளா் தினேஷ்குமாா், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ் மற்றும் திரளானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா். இதேபோல, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.மோகனாதேவியும் பவானி நகரப் பகுதியில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.