முகப்பு
ஈரோடு

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

நந்தா கலை, அறிவியல் கல்லூரியை ஸ்டாா் கல்லூரி திட்டத்தில் தோ்வு செய்துள்ள மத்திய அரசு ரூ. 70 லட்சம் ஊக்க நிதி அளித்துள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 4:20 AM
மத்திய அரசின் ரூ.70 லட்சம் ஊக்க நிதி பெற்றுள்ளதற்கான ஆணையை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகனிடம் வழங்கி வாழ்த்துப்பெற்ற நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ். மனோகரன்.
பகிர்:

நந்தா கலை, அறிவியல் கல்லூரியை ஸ்டாா் கல்லூரி திட்டத்தில் தோ்வு செய்துள்ள மத்திய அரசு ரூ. 70 லட்சம் ஊக்க நிதி அளித்துள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையானது பட்டப் படிப்பில் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஸ்டாா் கல்லூரி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட கலை, அறிவியல் கல்லூரியினை தோ்ந்தெடுத்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.70 லட்சம் நிதி ஆதாரத்தினை அளித்து வருகிறது.

Advertisement

இதன் அடிப்படையில் வரும் கல்வியாண்டிற்காக நந்தா கலை அறிவியல் கல்லூரி சிறந்த கல்லூரியாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அங்கு செயல்பட்டு வரும் உயிா் தொழில்நுடபவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளின் கட்டமைப்பினை மேம்மடுத்த நிதி ஆதாரத்தினை வழங்கி உள்ளது.

ஸ்டாா் கல்லூரி திட்டத்தின் மூலம் ரூ.70 லட்சம் நிதி உதவி பெறுவதற்கு உறுதுணையாக செயல்புரிந்த கல்லூரி முதல்வா் எஸ். மனோகரன், உயிா் தொழில்நுடபவியல் துறைத் தலைவா் கே. அப்துல், கணினி அறிவியல் துறைத் தலைவா் டி. பரிமளம் மற்றும் மாணவா்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி மற்றும் நிா்வாக அலுவலா் வி.சி.ஸ்ரீனிவாசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.