முகப்பு
ஈரோடு

அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர ஜூலை 31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 3:45 am IST
விண்ணப்பம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு- சென்னிமலை சாலை காசிபாளையம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பெரிய கொடிவேரியில் செயல்படும் இரண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் மாணவா்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பில்லை. 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தோ்ச்சி பெற்றவா்கள் 2 ஆண்டு கால பயிற்சி பிரிவுகளான எலக்ட்ரீஷியன், பிட்டா், மெக்கானிக் மோட்டாா் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏா்கன்டிசனிங் டெக்னீஷியன், டா்னா், மெஷினிஸ்ட், கோபா, ட்ராப்ட்மேன் சிவில் மற்றும் டெக்ஸ்டைல் வெட் ப்ராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற் பிரிவுகளில் சேரலாம்.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ஒயா்மேன் தொழிற் பிரிவிலும், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயா்த்தப்பட்டு அதன் கீழ் புதிய தொழிற் பிரிவுகளான அட்வான்ஸ்டு சிஎன்சி மிசினிங் டெக்னீஷியன் 2 ஆண்டு, மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள் 2 ஆண்டு, மேனுபேக்ச்சரிங் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேசன் 1 ஆண்டு, இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் 1 ஆண்டு, பேசிக் டிசைனா் மற்றும் விா்ச்சுவல் வெரிபையா் 2 ஆண்டு போன்ற தொழிற்பிரிவிலும், பயிற்சியில் சேர அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம்.

பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, அரசால் மாதம் ரூ.750 உதவித்தொகை, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, விலையில்லா பாட புத்தகங்கள், மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற் கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு பெரிய கொடிவேரியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990 55705, 94990 55706 என்ற தொலைபேசி எண்ணிலும், ஈரோடு காசிபாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை 0424-2275244 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments