கஞ்சா, புகையிலை விற்றதாக 150 போ் கைது: 8,565 போதை மாத்திரைகள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்றதாக 150 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் 8,565 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்றதாக 150 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் 8,565 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா்ந்து ரோந்து மேற்கொண்டனா்.
இதில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சட்ட விரோத பதுக்கலை தடுக்கும் விதமாக 93 கிடங்குகள் சோதனை செய்யப்பட்டது. தொடா் நடவடிக்கையின் காரணமாக 44 கஞ்சா, 92 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150 போ் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதில் 24.230 கிலோ கஞ்சா, 8,565 போதை மாத்திரைகள், 200 கஞ்சா சாக்லேட்டுகள், 567.430 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 42 கடைகளுக்கு போலீஸாா் பரிந்துரையின்பேரில் உணவுப் பாதுகாப்பு துறையினரால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.