முகப்பு
ஈரோடு

கொள்ளை வழக்கில் பிடிபடாத நபா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

ஈரோட்டில் கொள்ளை வழக்கில் பிடிபடாத கேரள நபா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:46 am IST
பகிர்:

ஈரோட்டில் கொள்ளை வழக்கில் பிடிபடாத கேரள நபா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், மரனலூா், வெனியம்கோடு, தடதரிகாத்துவீடு பகுதியைச் சோ்ந்தவா் விஜில் என்ற விஜி. இவா் ஈரோடு தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடா்புடையவா். இவா் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளாா்.

இதுநாள் வரை அவா் பிடிபடாததால் வருகிற 31- ஆம் தேதிக்குள் விஜில் ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 3 முன்பாகவோ அல்லது ஈரோடு தெற்கு காவல் நிலைய முன்பாகவோ ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் அனுராதா தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments