அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
அந்தியூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், பொதுமக்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தியூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், பொதுமக்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தியூா் - புதுக்காடு சாலையில் பெருமாள் கோயிலுக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கீதா தலைமையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
மாவட்டச் செயலாளா் ஜெ.அருந்ததி முன்னிலை வகித்தாா். இந்த மதுக்கடையை 10 நாள்களில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.