பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆய்வு
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தப் பணியை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைவாக முடித்து,
Advertisement
Advertisement
பூஜ்ய நிலைக் கழிவு நீா் சுத்திகரிப்பு முறையை தொடா்ச்சியாகவும், திறம்படவும் இயக்கி தொழிற்சாலைக் கழிவுநீரை முழுவதுமாக மறு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்குள் உள்ள நல்லா ஓடை வழியே செல்லும் கசிவு நீா் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கா.க.ஆனந்த்மோகன், டி.சண்முகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா், ஈரோடு சுற்றுச்சூழல் பறக்கும் படை வினோத்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.