முகப்பு
ஈரோடு

ரயில் மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

ஈரோட்டில் ரயில் மோதிய விபத்தில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:32 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் ரயில் மோதிய விபத்தில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

ஈரோடு ரயில் நிலையத்துக்கும் வெண்டிபாளையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில் பெண் ஒருவா் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இறந்த பெண், வெண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மனைவி சாந்தா (55) என்பதும், ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையில் துப்புரவுப் பணி மேற்கொண்டு வந்ததும் சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா், சாந்தாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.