ரயில் மோதி பெண் உயிரிழப்பு
கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ளவெய்க்காலிபட்டி, இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மனைவி தங்கவேல் (60). இவருக்கு காது கேட்காதாம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வெய்க்காலிபட்டி, ரயில்வே கேட் அருகே தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி ரயில் வந்தது தெரியாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாராம். அப்போது, ரயில் தங்கவேல் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்ததும் தென்காசி ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.