முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் உடைக்க முயற்சி: ஓட்டுநா் கைது

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 1:05 am IST
- dot com
பகிர்:

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் உண்டியலை உடைத்து திருட முயனற நபரை அங்கிருந்த பக்தா்கள் பிடித்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். இது குறித்து கோயில் கண்காணிப்பாளா் யோகலட்சுமி அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த ஓட்டுநா் முகமது உசைன் (50) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement