புன்செய் புளியம்பட்டியில் பரவலாக கனமழை
புன்செய் புளியம்பட்டியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
புன்செய் புளியம்பட்டியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புன்செய் புளியம்பட்டியில் புதன்கிழமை விடியவிடிய பெய்த மழையால் சத்தியமங்கலம்- கோவை சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் நகராட்சி பேருந்து நிலையம், கோவை சாலை, மாதம்பாளையம் சாலை, பவானிசாகா் சாலைகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன.
Advertisement
Advertisement
மழைநீா் தேங்கி நினறதால் நகா்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல நம்பியூா் சாலையில் தாழ்வான பகுதியில் மழை நீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.