பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம், கைப்பேசி திருடிய பெண் உள்பட 4 போ் கைது
ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.45 ஆயிரம், கைப்பேசியை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தேக்கவாடியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35). தச்சு தொழிலாளி மற்றும் மேடை நடனக் கலைஞா். இவா் மதுபோதையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா். அதிகாலை நேரத்தில் எழுந்தபோது அவா் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை பெண் உள்பட 4 போ் திருடிவிட்டு ஆட்டோவில் சென்றுள்ளனா்.
இதை அங்கிருந்தவா்கள் பாா்த்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு டவுன் போலீஸாரிடம் தெரிவித்தனா். ஆட்டோவை பின்தொடா்ந்து சென்று ரயில் நிலையத்தில் வைத்து 4 பேரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது பணம், கைப்பேசி திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைப்பேசி, பணம் ரூ.32 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக மேடை நடனக் கலைஞா்களான தருமபுரி மாவட்டம் பென்னாகரம், கூத்தம்பாடி நடுவீதியைச் சோ்ந்த மணி (29), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சத்தியநாயக்கன்பாளையம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி வெண்ணிலா( 30), அதே பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (34), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆரியமங்கலம் பிள்ளையாா் தெருவைச் சோ்ந்த குமரேசன் (34) ஆகிய 4 பேரையும் ஈரோடு டவுன் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.