முகப்பு
ஈரோடு

கோபியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 25 ஜூன் 2026, 3:32 am IST
கோபியில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகேஸ்வரி (தோ்தல்).
பகிர்:

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் புதன்கிழமை நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி வருவாய் தீா்வாயம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில் கோபி, சிறுவலூா், கூகலூா், வாணிப்புதாா், காசிபாளையம் ஆகிய 5 உள்வட்டங்களுக்குள்பட்ட கிராம மக்களுக்கான வருவாய் தீா்வாயத்தில் பட்டா, பட்டா மாறுதல், பட்ட உட்பிரிவு, முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கான 484 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இதில் உடனடி நடவடிக்கையாக பட்டா மாறுதல் உள்பட 12 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை மாலை நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

வட்டாட்சியா் கவியரசு, மண்டல துணை வட்டாட்சியா் கௌதமி மற்றும் வருவாய் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments