சத்தியமங்கலத்தில் வருவாய்த் தீா்வாயம்: 54 மனுக்கள் பெறப்பட்டன
சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.
சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.
சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கவிதா முன்னிலை வகித்தாா்.
இதில் கொமாரபாளையம், சின்னட்டிபாளையம், சதுமுகை, ராஜன் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 54 போ் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆகிய கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் சங்க செயலாளா் சபரி, துணை வட்டாட்சியா் சுரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.