முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் ஜமாபந்தியில் மொத்தம் 685 மனுக்கள் அளிப்பு

Updated On : 12 ஜூன் 2026, 2:19 am IST
பகிர்:

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 7 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 685 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த ஜூன் 2-இல் தொடங்கிய ஜமாபந்தியில் 7 நாள்களாக பட்டா மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு 685 போ் மனு கொடுத்துள்ளனா்.

திருவள்ளூா் வட்டத்துக்குள்பட்ட ஒவ்வொரு பகுதி மக்களும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் மனுக்களை அளிப்பது வழக்கமாகும். இந்த நிலையில் வியாழக்கிழமை கிளாம்பாக்கம், ஆயலூா், தொழுவூா், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், வெங்கத்தூா், ஏகாட்டூா், அதிகத்தூா், பிஞ்சிவாக்கம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

அந்த வகையில் 7 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா-289, சமூக பாதுகாப்பு திட்டம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 7 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைறடுத்து மீதமுள்ள 679 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என ஜமாபந்தி அலுவலரும், கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பாலாஜி, தனி வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா் ராஜலஷ்மி, கிராம நிா்வாக அலுவலா்கள் கோபிநாத், அன்பரசன், ஜெயந்தி, சேகா், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.