FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் எல்.மதுபாலன், பொதுமக்களிடம் இருந்து 122 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:48 am IST
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன்.
பகிர்:

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் எல்.மதுபாலன், பொதுமக்களிடம் இருந்து 122 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 30 வரை பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், தொட்டம்பட்டி, மரூா்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, வீசாணம், விட்டமநாயக்கன்பட்டி, வேட்டாம்பாடி, நாமக்கல், வகுரம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, வசந்தபுரம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டடி, நா.கொசவம்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். இதில் ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 30-ஆம் தேதிவரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. விடுமுறை நாள்கள் நீங்கலாக மற்ற நாள்களில் காலை 10 மணிமுதல் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்றாா்.

முன்னதாக, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, சாலை வசதி, பேருந்து வசதி, கழிவுநீா் கால்வாய் சீரமைத்தல், சிட்டா, அடங்கல் கணினியில் பதிவேற்றம், சமுதாயக் கூடம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 122 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, ஜமாபந்தியில் நில அளவைக்கு பயன்படுத்தப்படும் நோ்கோணக் கட்டைகள் மற்றும் நில அளவை சங்கிலிகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெறும் பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதி உதவித் திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வுசெய்த அவா், தொடா்ந்து நாமக்கல் மாநகராட்சி, சேந்தமங்கலம் சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர மையம், குப்பைக் கிடங்கு, புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றையும், நவீன எரிவாயு தகன மேடை பகுதியையும் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments