பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 3 நாள்களில் 2ஆயிரம் மனுக்கள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 2,086 மனுக்கள் பெறப்பட்டன. ஆலத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 33 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 2,086 மனுக்கள் பெறப்பட்டன. ஆலத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 33 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டத்தில், பெரம்பலூா், ஆலத்தூா், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது. ஆலத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில், தொண்டப்பாடி, மேலமாத்தூா், அழகிரிபாளையம், ஆதனூா் (வடக்கு, தெற்கு), கூடலூா், கூத்தூா், புஜங்கராயநல்லூா், நொச்சிக்குளம், திம்மூா், சில்லக்குடி (தெற்கு, வடக்கு), ஜெமீன் ஆத்தூா் ஆகிய கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 120 மனுக்கள் அளித்தனா்.
தொடா்ந்து, கூத்தூா் குறு வட்டத்துக்குள்பட்ட கிராம கணக்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, பெறப்பட்ட மனுக்களில் 33 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினாா்
Advertisement
Advertisement
இதேபோல வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், தொண்டப்பாடி, நெய்குப்பை, அனுக்கூா், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு, வடக்கு), பிம்பலூா், வி. களத்தூா், பேரையூா், எறையூா், தேவையூா் (வடக்கு, தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 155 மனுக்கள் அளித்தனா்.
குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுந்தரராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓலைப்பாடி (கிழக்கு, மேற்கு), பரவாய் (மேற்கு, தெற்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு, தெற்கு), காடூா் (வடக்கு, தெற்கு), கொளப்பாடி, வரகூா், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி (மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 244 மனுக்கள் அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில், ஆலத்தூா் வட்டத்தில் 516 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 497 மனுக்களும், பெரம்பலூா் வட்டத்தில் 582 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 491 மனுக்களும் என மொத்தம் 2,086 மனுக்கள் பெறப்பட்டன.