பெத்தாம்பாளையம் அருகே பெண் சடலம் மீட்பு
பெத்தாம்பாளையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெத்தாம்பாளையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம், கருக்கம்பாளையம், வெள்ளப்பாறை அருகில் உள்ள விவசாய பூமியில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று ஆய்வு மேற்கொண்டனா். 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டனா். இறந்தவா் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.