பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து சுவாமி புறப்பாடு, அஷ்டபலி நடைபெற்றது.
அமரபணீஸ்வரருக்கும், சௌந்திரநாயகி அம்பாளுக்கும் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.