கட்டுப்படியான விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்பட்ட சம்பங்கிப் பூக்கள்
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு அனுப்பப்பட்ட சம்பங்கிப்பூக்கள், விலை குறைவால் இரண்டு மாநில எல்லைப் பகுதியில் கொட்டப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பங்கிப்பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக் காலம் என்பதால் சம்பங்கிப்பூக்கள் மகசூல் தினமும் 10 டன்னாக அதிகரித்துள்ளது. சுபமுகூா்த்தம், பண்டிகை நாள்கள் இல்லாத நிலையில் தேவையைவிட உற்பத்தி அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.50 வரை விற்பனையான சம்பங்கிப்பூக்கள் தற்போது கிலோ ரூ.10-ஆக சரிந்துள்ளது.
பூக்கள் தேக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேன் மூலமாக மைசூரு, பெங்களூருக்கு சம்பங்கிப்பூக்களை அனுப்பிவைத்தனா். ஆனால் மைசூரில் கிலோ ரூ.5-க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வராததால் சம்பங்கிப்பூக்களை மீண்டும் கொண்ட வர விவசாயிகள் விரும்பவில்லை. உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள், இரண்டு மாநில எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம் பூக்களை கொட்டிச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.