முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் கம்பம் நடும் விழாவில் இளைஞா்கள் உற்சாகம்

Updated On : 12 மே 2026, 12:07 am IST
தண்டுமாரியம்மன்  கோயில்  முன்  நடப்பட்ட  கம்பத்தைச்  சுற்றி நடனமாடிய இளைஞா்கள்.
பகிர்:

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழாவில், ஒரே நேரத்தில் ஏராளமான இளைஞா்கள் உற்சாக நடனமாடினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 29-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி கோவில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன. கம்பத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சள் பூசியும் பெண்கள், குழந்தைகள் வழிபட்டனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தைச் சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இசைக்கேற்ப இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனமாடினா். இதைக் காண பெண்கள் அதிக அளவில் வந்தனா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விழாவில் தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments