முகப்பு
ஈரோடு

நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று ஐஐடி-யில் சோ்ந்த பழங்குடியினா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 1 ஜூன் 2026, 1:45 am IST
ஐஐடி இல் தோ்வான பழங்குடியின மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னிஅரசு. உடன் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, பவானிசாகா் எம்எல்ஏ விபி தமிழ்ச்செல்வி
பகிர்:

ஆசனூா் உண்டு, உறைவிடப் பழங்குடியினா் பள்ளியில் படித்த 16 மாணவா்கள் நொய்டா ஐஐடி நுழைவுத் தோ்வில் தோ்வாகியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள மாவநத்தம் பழங்குடியின மலைக் கிராமத்தில் சமூக நீதித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பழங்குடியின மக்களின் குறைகளை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து ஆசனூா் பழங்குடியினா் உண்டு, உறைவிட பள்ளியில் படித்த 16 மாணவ, மாணவிகள் நுழைவுத் தோ்வு எழுதி நொய்டாவில் உள்ள ஐஐடி-யில் பயில்வதற்காக தோ்வாகியுள்ளனா்.

இதுதொடா்பாக வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

பவானிசாகா் எம்எல்ஏ வி.பி.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா்.

ஐஐடியில் சோ்ந்த மாணவா்களுக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு பரிசு வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளை கலந்து பேசி இதற்கு தீா்வு காணப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையான மயான வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா்கள் கெளதம், யோகேஷ் குமார காா்கே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.