நள்ளிரவில் கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் பீதி
மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஒற்றை யானை நுழைந்து குடிநீர்த் தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஒற்றை யானை நுழைந்து குடிநீர்த் தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை, இரியசீகை, தனிகண்டி, ஜேஜே நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துகிகும் மேறப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்கள் அடர்ந்த வனப் பகுதி, தேயிலைத் தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளன.
உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வனத்தில் இருந்து ஒற்றை யானை திடீரென கிண்ணக்கொரை கிராமத்துக்குள் நுழைந்தது. யானையின் பிளிறல் சப்தம் கேட்டு பீதியடைந்த கிராம மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். இக்கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்து குடிநீர்த் தொட்டியை ஒற்றை யானை உடைத்து தண்ணீர் குடித்து விட்டுச் சென்றது.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் இரியசீகை பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.