உதகையில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
டெங்கு நோய் வராமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உதகையில் பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
டெங்கு நோய் வராமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உதகையில் பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அந்தந்த பகுதியில் டெங்கு நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். துண்டுப் பிரசுரங்களும் வழங்குகின்றனர்.
அதில், "கொசு உற்பத்தியைத் தடுக்க ஆட்டுக்கல், சிமென்ட் தொட்டிகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் கேன்கள், பானைகள், பிளாஸ்டிக் டிரம்கள், சட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றுக்குள் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன' என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.