முகப்பு
நீலகிரி

"நோட்டரி பப்ளிக்' பதவி  வழங்கியதில் முறைகேடு எனக் கூறி  2 வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

சான்று உறுதி அதிகாரி (நோட்டரி பப்ளிக்) பதவி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி

Updated On : 24 ஜனவரி 2019, 12:29 am IST
பகிர்:

சான்று உறுதி அதிகாரி (நோட்டரி பப்ளிக்) பதவி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, கூடலூரில் இரண்டு வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை முதல் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சான்று உறுதி அதிகாரி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்றது. ஆனால், பதவி வழங்கும்போது அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்தப் பதவியைக் கொடுத்துவிட்டு, தகுதியானவர்களுக்கு வழங்கவில்லை எனக் கூறி வழக்குரைஞர்களான மாத்யூ, சுகுமாரன் ஆகிய இரண்டு பேர் கூடலூர் காந்தித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.