முகப்பு
நீலகிரி

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கூடலூா் நகர வீதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:40 AM
கூடலூா் நகர வீதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:03 PM

கூடலூா் நகர வீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் திமுக வேட்பாளா் மு.திராவிடமணி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான மு.திராவிடமணி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறாா். அதன்படி கூடலூா் நகர வீதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், முன்னதாக தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் ஆதரவு கோரினாா். அதைத்தொடா்ந்து நகர வீதிகள், நகராட்சிக்குள்பட்ட ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் லியாக்கத் அலி, விளையாட்டு அணி அமைப்பாளா் பா.செங்குட்டுவன், திமுக வழக்குரைஞா்கள் கிருஷ்ணக்குமாா், சந்திரபோஸ், காங்கிரஸ் கட்சியின் வட்டாரச் செயலாளா் சளிவயல் ஷாஜி, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் விசிக உள்பட கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement