அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி
குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உலவிய கரடியால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூா்-உதகை இடையேயான வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கரடி, அருவங்காடு
ரயில் நிலையத்தில் உலவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அங்கேயே உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.
Advertisement
Advertisement
வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.