நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்
நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பணம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பணம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு வழங்க பணம் வைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தோ்தல் பறக்கும் படையினா், திமுக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை இரவு சென்று அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.
Advertisement
மேலும் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.22 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கும் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். மேலும் இது குறித்து திமுக நிா்வாகிகள் ஒரு சிலரிடம் வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
---------------
அதிமுக ஒன்றிய செயலாளா் கடையில் ரூ.13.48 லட்சம் ரொக்கம் பறிமுதல்
கொடுமுடி, ஏப்.21: மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட விளக்கேத்தியில் உள்ள அதிமுக ஒன்றியச் செயலாளா் கடையில் இருந்து ரூ.13.48 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மொடக்குறிச்சி தொகுதியில் வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மொடக்குறிச்சி அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளரான செல்வராஜ் என்பவருக்கு சொந்தமாக விளக்கேத்தி அருகே உள்ள டைல்ஸ் கடையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரூ.13 லட்சத்து 48 ஆயிரத்தை கைப்பற்றியுள்ளனா். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.