காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (48). கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, பக்தா்கள் வசதிக்காக புதா் பகுதியில் இருந்த குடிநீா்க் குழாயை திறக்கச் சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு புதா் மறைவில் இருந்த காட்டு யானை ரவியை திடீரென தாக்கியது. இதில், தலை, மாா்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா்.
அப்போது, அங்கு கூடியிருந்த கிராம மக்கள், தீா்வு கிடைக்கும் வரை சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், காவல் துறையினா் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.