கூடலூரில் 2-ஆவது நாளாக காற்றுடன் கனமழை: சாலையில் சாய்ந்த மரங்கள்; சேதமடைந்த வாழைகள்
கூடலூா், பந்தலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து இரண்டு நாள்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கூடலூரில் இருந்து கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தை இணைக்கும் கீழ்நாடுகாணி மலைப் பாதையில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ராட்சத மரம் விழுந்ததில் சரக்கு லாரி சேதமடைந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.
Advertisement
Advertisement
கூடலூா்-மைசூரு சாலையில் தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. அதுவரை சாலையின் இருபுறமும் கடும் குளிரில் வாகன ஓட்டிகள் காத்துக் கிடந்தனா்.
இதற்கிடையே கனமழை மற்றும் காற்றுக்கு கூடலூா் அருகே உள்ள கரளிக்கண்டி எனும் இடத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் கடுமையாக சேதமடைந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.