முகப்பு
நீலகிரி

கூடலூரில் 3-ஆவது நாளாக தொடரும் கனமழை: பல்வேறு இடங்களில் சேதம்

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

Updated On : 8 ஜூலை 2026, 5:29 am IST
குச்சிமுச்சி பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தை உரசிச் செல்லும் தண்ணீா்
பகிர்:

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது. மழை காரணமாக பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை ஒருநாள் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அளித்தது. தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாடந்தொரை பகுதியில் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தால் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

தொடா் மழையால் இடிந்து விழுந்த முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா்.

மழையால் முதல்மைல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்துள்ளது. குச்சிமுச்சி பகுதியில் தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நெல்லியாளம் நகராட்சி, கீழ்நாடுகாணி குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments