தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்
கோத்தகிரியில் உள்ள பிரபல தனியாா் பள்ளி வளாகத்துக்கு சுவரி ஏறி குதித்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு தேடி குடியிருப்பு, சாலைகள், தேயிலைத் தோட்டங்களில் உலவி வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள விஸ்வசாந்தி தனியாா் பள்ளி வளாகத்தின் சுவா் மீது ஏறு உள்ளே குதித்து நீண்ட நேரமாக அங்கு உலவி வந்தது. இதைக் கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த சோலைக்குள் சென்று மறைந்தது.
Advertisement
Advertisement
பள்ளி விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக கூண்டு வைத்து கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.