ஹைதராபாத்: கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலி; உயிர்பிழைத்த குழந்தை!
ஹைதராபாத்தில் கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலியான நிலையில் குழந்தை உயிர்பிழைத்தது.
ஹைதராபாத்தில் கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலியான நிலையில் குழந்தை உயிர்பிழைத்தது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஈஷா சாஹு (37). மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்த அந்த பெண் வெள்ளிக்கிழமை மாலை கைக்குழந்தையுடன் குடியிருப்பு ஒன்றின் 6-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈஷா சாஹு சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆனால் அவருடைய குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது. குடியிருப்பு வளாக சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த சூரிய ஆற்றல் வேலியின் கம்பிகள் மீது குழந்தை விழுந்ததால் உயிர்பிழைத்தது. அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிஅழுகுரலைக் கேட்டு, குழந்தையை மீட்டெடுத்தார்.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது குழந்தையின் உடல்நிலை ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன், அப்பெண் தனது கணவரை கடைக்கு அனுப்பியிருக்கிறார்.
கணவர் வீடு திரும்புவதற்குள், அவர் தனது குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து குதித்துவிட்டார். பலியான பெண்ணுக்கு கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இத்தம்பதியினருக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன.
அவரது கணவரும் மென்பொருள் துறையிலேயே பணிபுரிகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அப்பெண் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A woman techie has jumped to her death from the sixth floor of an apartment here, carrying her six-month-old baby, who survived miraculously.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.