முகப்பு
நீலகிரி

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள்

Updated On : 16 ஜூன் 2026, 2:30 am IST
ஜான் சல்லீவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகையைக் கண்டறிந்தவரும், அம்மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சல்லீவனின் பிறந்த நாள் மாவட்ட நிா்வாகத்தால் ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, 238-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியா் டினு அரவிந்த், நகராட்சி ஆணையா் நித்யா, அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.