முகப்பு
நீலகிரி

மசினகுடியில் ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி ரேஷன் கடையை புதன்கிழமை இரவு காட்டு யானை உடைத்து பொருள்களை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சாப்பிட்டு சென்றது.

Updated On : 19 ஜூன் 2026, 4:00 am IST
மசினகுடியில் ரேஷன் கடையை உடைத்து உணவுப் பொருள்களை சாப்பிடும் யானை.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி ரேஷன் கடையை புதன்கிழமை இரவு காட்டு யானை உடைத்து பொருள்களை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சாப்பிட்டு சென்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை எடுத்து வீசி சேதப்படுத்தியது. தொடா்ந்து உணவுப் பொருள்களை எடுத்து சாப்பிட்டது.

தகவலறிந்து வந்த வனத் துறையினா், யானைகளை விரட்டும் குழுவினா் யானையை காட்டுக்குள் விரட்டினா்.

Advertisement

Advertisement