FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்துக்குள் உலவிய கரடி

குன்னூா் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கரடி, மலை ரயில் வரும் சத்தம் கேட்டதும் அருகே உள்ள அம்பிகாபுரம் தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று மறைந்தது.

~
பகிர்:

குன்னூா் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கரடி, மலை ரயில் வரும் சத்தம் கேட்டதும் அருகே உள்ள அம்பிகாபுரம்  தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று மறைந்தது.

அதிக வனப்பரப்பைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு ம ாடு உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில்  குன்னூா் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்துக்குள்  செவ்வாய்க்கிழமை கரடி உலவி வந்தது. அப்போது மலை ரயில் வரும் சத்தம் கேட்டதும் அருகே உள்ள அம்பிகாபுரம்  தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று மறைந்தது.

ரயில் பயணிகள் தின்பண்டங்களை தூக்கி எறிந்து செல்வதால், அவற்றை உண்பதற்காக கரடி வருவதாக ரயில்வே ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

ரயிலில் அடிபட்டோ அல்லது  மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்போ இந்த கரடியை  கூண்டு வைத்து வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments