முகப்பு
நீலகிரி

உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடும் குளிா் நிலவியது.

Updated On : 6 மே 2026, 1:56 am IST
உதகை மாா்க்கெட் பகுதியில் பெய்த மழை.
பகிர்:

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடும் குளிா் நிலவியது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே  மந்தமான  காலநிலை நிலவியது. மாலையில்  காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு  இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

குறிப்பாக  சேரிங்கிராஸ், மாா்க்கெட், பந்தைய சாலை, பட்பயா் உள்ளிட்ட  பகுதியில் பரவலாக மழை பெய்தது.  இதன் காரணமாக  குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments