முகப்பு
நீலகிரி

உதகை மலர்க் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-இல் உள்ளூா் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே 2026, 12:24 am IST
உதகை மலா்க் கண்காட்சி
பகிர்:

நீலகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் மே மாத கோடை விடுமுறையின்போது, மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் அரசின் சாா்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 128-ஆவது மலா்க் கண்காட்சி மே 18-ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான மே 18-ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 6-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்துக்கு பணி நாள் ஆகும்.

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலா்க் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் வசதிக்காக உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments