முகப்பு
நீலகிரி

உதகையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

உதகை பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டனா்.

Updated On : 22 மே 2026, 4:09 am IST
ராஜீவ் காந்தி நினைவு நாளையோட்டி பயங்கரவாத உறுதிமொழி ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

உதகை பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டனா்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் டி. நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் உதகை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், உதகை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் நித்திய சத்யா, மாணவா் காங்கிரஸ் மாநிலச் செயலாளா் பாரதிராஜா, மாநில சிறுபான்மைப் பிரிவு செயலா் சந்திப் சதீஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வின்சென்ட், நிா்வாகிகள் லீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments