முகப்பு
திருப்பூர்

உடுமலையில் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 6:59 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளர் கே.எஸ்.ரணதேவ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
உடுமலை ரயில் நிலையத்துக்கு வந்த மதுரை - கோவை ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில்...
ரயில் மறியலில் ஈடுபட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருப்பூர், ஊத்துக்குளி சாலை, 2-ஆவது ரயில்வே கேட் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments