முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

திருப்பூர் மாநகர  காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:03 am IST
பகிர்:

திருப்பூர் மாநகர  காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். 
பி.என்.சாலை, பூலுவப்பட்டி சோதனைச் சாவடியில் அனுப்பர்பாளையம்  போலீஸார்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வெள்ளியங்காட்டை சேர்ந்த கோட்டைசாமி, பல்லடத்தைச் சேர்ந்த மதன்குமார், உசேன் என்பது தெரியவந்தது. 
மேலும்,  கோட்டை சாமியும், மதன்குமாரும், அவர்களுடன் குமார் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் சுப்புலட்சுமி என்பவரிடம் மார்ச் 24-ஆம் தேதி வீட்டுக்குப் போகும்போது கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கோட்டை சாமி, மதன்குமார் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்த உசேனையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 7 பவுன் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸார்  பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கோட்டைசாமி, மதன்குமார், உசேன் ஆகிய 3 பேரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments