திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகமான திருப்பூர், கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகமான திருப்பூர், கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதிக்காத மத்திய அரசின் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
அதைத் உணர்த்தும் வகையில் ஏப்ரல் 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய "பொது வேலை நிறுத்தம்" நடத்துவது.
அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாகப் பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி "காவிரி உரிமை மீட்புப் பயணம்" மேற்கொள்வது.
தமிழகத்துக்குப் பிரதமர் வரும்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில், அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் "கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்" நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் திரளாகப் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகள் அனைவருக்கும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதுபோல, மண்டல நாட்டுக்குப் நன்கொடைகள் பெற்றுக் கொடுத்த அனைத்து அணியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.