முகப்பு
திருப்பூர்

வெங்காயம் கொள்முதல் விலை கடும் சரிவு

வெள்ளக்கோவில் பகுதியில் சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:02 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதியில் சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
இப்பகுதியில் லக்கமநாய்க்கன்பட்டி, புதுப்பை, கம்பளியம்பட்டி, சங்கராண்டாம்பாளையம், அணைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
இது, குறுகிய கால (80 நாள்) பயிராவதால் வருமானத்துக்காக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் ஒரே சமயத்தில் ஏராளமான வெங்காயம் விற்பனைக்குத் தயாராக உள்ளது.
இயற்கை விவசாயத்தில் உற்பத்தியான வெங்காயம் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. ஆனால், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட வெங்காயம் 2 மாதத்தில் அழுகிவிடும்.  வெங்காயத்தைப் பட்டறை அமைத்து இருப்பு வைத்துப் பின்னர் விற்பனை செய்வது அனைவராலும் இயலாத காரியமாகும். கடந்த 60 நாள்களுக்கு முன்னர் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 20 - க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 10 - க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 
சந்தையில் நுகர்வோருக்கு கிலோ ரூ. 20 -  க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தக் கொள்முதல் விலை சரிவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments