வெள்ளக்கோவிலில் ரூ.16.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 16.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 16.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பழனி, முத்தம்பட்டி, லாலாபேட்டை, கருக்கம்பாளையம், அணைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 59 விவசாயிகள் தங்களது கொப்பரைகளை இங்கு விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 308 மூட்டைகளாக இருந்தது.
இவற்றை வாங்குவதற்காக காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், சிவகிரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 12 வணிகர்கள் வந்திருந்தனர்.
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கொப்பரைகளின் மொத்த எடை 16,343 கிலோ. அதிகபட்சமாக கிலோ ரூ. 141.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 60-க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது.
மொத்தம் ரூ. 16 லட்சத்து 51 ஆயிரத்து 919-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.