காங்கயம் அருகே கதை சொல்லும் பயிலரங்கம்
கதை சொல்லி வளர்ப்போம் குழந்தைகளை என்னும் தலைப்பில் கதை சொல்லும் இயற்கை வாழ்வியல் பயிலரங்கம்
கதை சொல்லி வளர்ப்போம் குழந்தைகளை என்னும் தலைப்பில் கதை சொல்லும் இயற்கை வாழ்வியல் பயிலரங்கம் காங்கயம் அருகே மருதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நத்தக்காடையூரை அடுத்த மருதுறை கிராமத்தில் உள்ள காளிவலசு அரண்மனைத் தோட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான வாழ்வியல் ஆளுமைப் பயிலரங்கம் நடைபெற்றது. சமம் வாசிப்புக் களத்தின் பொறுப்பாளர் அ.பிரபு செபாஸ்டியன் தலைமை வகித்தார்.
இதில், தன்னம்பிக்கை தரும் கலை நிகழ்வுகளான தமிழ்ப் பாரம்பரியக் கும்மி, சிலம்பாட்டம், களிமண்ணில் படைப்புருவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மூலிகைகளும், அதன் பயன்களும் குறித்து மாணவ, மாணவிகள் ஆய்வறிக்கை தயார் செய்து குழுக்களாகப் பயிலரங்கில் சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். இயற்கை உணவுகள், பழங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், மாணவர்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், சமம் வாசிப்புக் களம் ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்திருந்தார்கள். இதில், விருதுநகர் ரமேஷ், காங்கயம் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் தங்கவேல், யோகா ஆசிரியர்கள் காங்கயம் காளியப்பன், நல்லசிவம், ஜெகநாதன், விஸ்வநாதன், சுடர்மதி, பாரதிதேவி, தனலட்சுமி, வழிகாட்டி ஆசிரியர்கள் ஜோசப், கல்யாணி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கு வழிகாட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.